• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார நிலைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் சார்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி கொள்கை அடிப்படையிலான விசேட கடன் வசதிகளை வழங்குதல்
– சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதிகளுக்கு ஒருங்கிணைவாக இலங்கையில் நிலைப்படுத்தல் மற்றும் நிர்வாகத்தை பலப்படுத்தும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியானது 350 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொள்கை அடிப்படையிலான விசேட கடன் வசதியொன்றையும் 1.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொழிநுட்ப ஒத்துழைப்பு நிதியையும் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க உரிய கடன் தொகையினைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக தொடர் நடவடிக்கையினை எடுப்பதற்கு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளருக்கு அதிகாரத்தினை கையளிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.