• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தை திருத்துதல்
– சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க சட்டவிரோத வௌிநாட்டு வேலைவாய்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் துணை முகவர்கள் ஊடாக வௌிநாட்டு தொழில்வாய்ப்புகளுக்காக இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டினை ஒழுங்குறுத்துவதற்கும் வௌிநாட்டு தொழில்வாய்ப்பு புலம்பெயர் தொழிலாளர்களை ஆபத்துகளுக்கு உள்ளாக்கும் பாரிய அளவிலான முறைக்கேடுகள் மற்றும் ஊழலை குறைப்பதற்கு இயலுமாகும் வகையில் புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு உத்தேச திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தை திருத்துவதற்கும் அதன்பொருட்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.