• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விவசாய வனவியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிலையத்திற்கும் உலக பசுமை அபிவிருத்தி நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டுரிமைகள்
– 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த நாட்டில் இயங்கும் சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டுரிமைகளை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து அதன் பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். அதற்கிணங்க, விவசாய வனவியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிலையத்திற்கும் உலக பசுமை அபிவிருத்தி நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகளிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டுரிமைகளை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் குறித்த இந்த தகவல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.