• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட பின்வரும் ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளு மன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2023‑04‑06 ஆம் திகதியிடப்பட்டதும் 2326/40 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பிரசுரிக்கப்பட்டுள்ள, 2023 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கொடுப்பனவு முறை தொடர்பிலான இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள்.

* 2023‑04‑06 ஆம் திகதியிடப்பட்டதும் 2326/41 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பிரசுரிக்கப்பட்டுள்ள, 2023 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்.