• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுவரெலியா சுற்றுலா அபிவிருத்தி பிரதான திட்டத்தை தயாரித்தல்
– நுவரெலியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முறைசாரா அபிவிருத்தி காரணமாக நுவரெலியா நகரத்தின் அழகு படிப்படியாக குறைந்து வருவதோடு இதன் காரணமாக சுற்றுலா கைத்தொழிலுக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆதலால், இந்தப் பிரதேசத்தின் சுற்றுலா தொழிலின் அபிவிருத்திக்குத் தேவையான சூழலை உருவாக்கும் விதத்தில் விரிவான சுற்றுலா அபிவிருத்தி பிரதான திட்டத்தை தயாரிக்கும் தேவை எழுந்துள்ளது. அதற்கிணங்க உரிய சகல தரப்பினர்களையும் இணைத்து சனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நுவரெலியா சுற்றுலா அபிவிருத்தி பிரதான திட்டத்தை தயாரிப்பதற்கும் புதிய கட்டடங்களின் நிர்மாணிப்புகளை ஒழுங்குறுத்துவதற்கு மத்திய மாகாண மாண்புமிகு ஆளுநரின் தலைமையில் செயலணியொன்றை நியமிப்பதற்கும் 2023‑05‑01 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக நுவரெலியா மாவட்டத்தில் நான்கு (04) மாடிக்கு மேற்பட்ட புதிய கட்டடங்கள் நிர்மாணிப்பதை வரையறுத்து நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குவிதிகளை பிறப்பிப்பதற்கும் மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.