• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
– உற்பத்தி தொழிலை மேம்படுத்துதல், சர்வதேச வர்த்தகத்திற்குள்ள தடைகளை நீக்குதல் மற்றும் கமத்தொழில் அடங்கலாக உள்நாட்டு கைத்தொழில்கள் மற்றும் கருத்திட்டங்களுக்குத் தேவையான ஊக்குவிப்புகளையும் வகதிகளையும் வழங்கும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி மற்றும் வர்த்தக பொருட்கள் ஏற்றுமதி நிவாரண திட்டத்தின் கீழான வரி (செஸ்வரி) போன்ற தீர்வையற்ற இறக்குமதியின் மீது விதிக்கப்பட்டுள்ள பிற வரிகளை படிப்படியாக நீக்குவதற்கு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க நடவடிக்கை எடுக்கும் போது அரசாங்கத்தின் வருமானத்தின்பால் ஏற்படும் தாக்கத்தினை சீர்செய்வதற்கு சுங்க இறக்குமதி வரி மூலம் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வேலைத்திட்டம் உலக வங்கியின் அபிவிருத்தி கொள்கை நிதியிடல் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக நிறைவேற்றப்படவேண்டிய முன் நடவடிக்கையொன்றாக இனங்காணப் பட்டுள்ளது. இதற்கிணங்க ஆரம்ப நடவடிக்கையாக அரசாங்கத்திற்கு ஆகக்குறைந்த வருமான இழப்பு ஏற்படும் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 1,631 சுங்கத் தீர்வை பண்டங்களை துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரியிலிருந்து விலக்களிக்கும் பொருட்டு 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் கட்டளையொன்று வௌியிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிக சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.