• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி பிரதிலாபங்கள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக நலன்புரி பிரதிலாபங்கள் கொடுப்பனவு திட்டமொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்துதல்
- 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி பிரதிலாபங்கள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக நலன்புரி பிரதிலாபங்கள் கொடுப்பனவு சம்பந்தமாக ஏற்புடையதாகும் கால எல்லை, திட்டத்தின் கீழ் நலன் பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை, நடைமுறைக்கு வரும் திகதி, திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு ஏற்கவேண்டி நேரிடும் செலவு போன்ற விடயங்களை திட்டவட்டமாக குறிப்பிட்டு அதன் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் வர்த்தமானியில் பிரசுரித்து உரிய பிரதிலாபங்கள் கொடுப்பனவினை செலுத்துவதற்கு முன்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளவேண்டியுள்ளது. இதற்கிணங்க நடைமுறைப்படுத்தவேண்டிய நலன்புரி பிரதிலாபங்கள் கொடுப்பனவு திட்டமொன்றை வகுப்பதற்கு வழிகாட்டல்களின் பொருட்டு விடயம் சார்ந்த நிபுணர்களைக் கொண்ட தொழினுட்பக் குழுவொன்று சனாதிபதியின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிநுட்பக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலுள்ள விடயங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வறுமை இடைவௌியினை அடிப்படையாகக் கொண்டு மாற்றுத்திறனாளிகள், நளிவுற்றோர் மற்றும் அதிவறுமை குழுக்கள் சார்பில் நலன்புரி பிரதிலாபங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது பிரதிலாபங்களைப் பெறும் மாற்றுத்திறனாளிகள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் ஆகியோர்களை இனங்கண்டு அவர்கள் சார்பில் புறம்பான பிரதிலாபங்கள் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச நலன்புரி பிரதிலாபங்கள் திட்டங்கள் 2023‑07‑01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, இதன்பொருட்டு செலவாகும் மொத்தத் தொகை ஆண்டொன்றில் சுமார் 206 பில்லியன் ரூபாவென கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க உத்தேச நலன்புரி பிரதிலாபங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிக சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.