• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1976 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இலங்கை கட்டிட கலைஞர்களின் நிறுவன சட்டத்தை திருத்துதல்
– இலங்கையில் கட்டடக்கலை தொழில், அதன் நடைமுறை மற்றும் கட்டடக்கலைக் கல்வி சம்பந்தமாக 1976 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இலங்கை கட்டிட கலைஞர்களின் நிறுவன சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட இலங்கை கட்டிடக்கலைஞர்கள் நிறுவனம் செயலாற்றுகின்றது. கட்டடக்கலை தொழிலை சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் இலங்கை கட்டடக் கலைஞர்கள் நிறுவ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டடக்கலை நடைமுறைகள், உறுப்புரிமை, மற்றும் பதவிப் பெயர் பாவனை என்பவற்றுக்குரிய பிரிவுகளைத் திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இது தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக தொடர்புடைய தொழில் சார் நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவின் சிபாரிசினை அடிப்படையாகக் கொண்டு 1976 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இலங்கை கட்டிட கலைஞர்களின் நிறுவன சட்டத்தின் உரிய பிரிவுகளைத் திருத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.