• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மலைநாட்டு சட்டப் பிரகடனம் மற்றும் திருத்த கட்டளைச் சட்டத்துக்கான திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
- மலைநாட்டு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திருமணத்தின் போது விதவைகளுக்கு நேரிடும் சாதகமற்ற நிலைமையினை திருத்துவதற்கு இயலுமாகும் வகையில் பொது சட்டத்தின் கீழ் விதவையொருவருக்கு ஏற்புடையதாகும் பாரம்பரிய உரிமைகளை மலைநாட்டு சட்டத்தின் கீழ் திருணமான விதவை ஒருவருக்கும் உரியதாகும் விதத்தில் ஏற்பாடுகளைச் செய்யுமாறு மலைநாட்டு சமூகம் நீண்டகாலமாக கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. இதற்கிணங்க, மலைநாட்டு சட்டப் பிரகடனம் மற்றும் திருத்த கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் இதன் பொருட்டு திருத்த சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.