• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அபிவிருத்தி லொத்தர் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் லொத்தர் சீட்டிழுப்புக்கான லொத்தர் சீட்டுக்களை அச்சிட்டு வழங்குவதற்கான பெறுகை
– 2023 மே மாதம் தொடக்கம் ஒரு வருட காலத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபைக்கு கணனிசார் சீட்டிழுப்புக்காக ராசி அதிர்ஷ்டம், அத கோடிபதி, சனிதா, சுப்பர் போல், அபிவிருத்தி அதிர்ஷ்டம், ஜயோதா, கப்ருக மற்றும் சசிரி போன்ற லொத்தர் சீட்டுக்களை அச்சிட்டு வழங்கல் தொடர்பான பெறுகை சார்பில் லொத்தர் சீட்டுவகை ஒவ்வொன்றின் அடிப்படையிலும் தேசிய ரீதியில் போட்டிகரமான கேள்வி முறையினைப் பின்பற்றி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதன் பொருட்டு ஆறு (06) விலை முன்வைப்பாளர்கள் தமது விலை முன்வைப்புகளைச் செய்துள்ளனர். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழு மற்றும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபை என்பவற்றின் சிபாரிசின் மீது பின்வருமாறு லொத்தர் சீட்டுக்களை அச்சிட்டு வழங்கும் பெறுகையினை கையளிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* ராசி அதிர்ஷ்டம், அத கோடிபதி, சுப்பர் போல் மற்றும் கப்ருக ஆகிய லொத்தர் சீட்டுக்களை அச்சிட்டு வழங்கும் பெறுகையினை Grand Export (Pvt) Ltd. நிறுவனத்திற்கு கையளித்தல்.

* சனிதா, அபிவிருத்தி அதிர்ஷ்டம், ஜயோதா, மற்றும் சசிரி ஆகிய லொத்தர் சீட்டுக்களை அச்சிட்டு வழங்கும் பெறுகையினை Printcare Secure Ltd. நிறுவனத்திற்கு கையளித்தல்.