• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் மாலைதீவு கலாசார நிலையத்தை தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடல்
– கலை மற்றும் கலாசார நடவடிக்கைகள் சம்பந்தமான பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல், விளையாட்டுகள் சார்பில் வசதிகளை வழங்குதல், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், மாநாடுகள், பொதுமக்களுக்கான சொற்பொழிவுகள், திரைப்படங்கள் மற்றும் ஏனைய கற்புல செவிப்புல படைப்புகளை காட்சிப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக இலங்கையில் மாலைதீவு குடியரசின் கலாசார நிலையமொன்றைத் தாபிப்பதற்கான பிரேரிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இருதரப்பும் உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, வரைவு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கிணங்க, குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.