• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டம் - 'நாட்டிற்கு உயிர்கொடுக்கும் நல்ல நாள்'
- 2020 ஆம் ஆண்டில் தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக சிங்கள, தமிழ் புத்தாண்டு விழாவின் சுபவேளையில் மரக்கன்றினை நடும் தேசிய நிகழ்ச்சித்திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 'சுபவேளைக்கு ஓர் நடுகைக் கன்று - நாட்டிற்கு உயிர்கொடுக்கும் நல்ல நாள்' என்னும் மரநடுகை நிகழ்ச்சித்திட்டம் குறித்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதன் கீழ் நாடுமுழுவதும் 11 இலட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த ஆண்டிலும் சிங்கள, தமிழ் புத்தாண்டு விழாவின் சுபவேளைக்கு அமைவாக 2023‑04‑20 ஆம் திகதியன்று மு.ப.6.38 மணியளவில் மரநடுகை சுபவேளை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுபவேளையினை மையமாகக் கொண்டு மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கமத்தொழில் அமைச்சினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, இந்த ஆண்டில் பயன்தரும் பல்லாண்டு பயிரொன்றினை நடுவதற்கும் இதன் பொருட்டு நாட்டின் 52 இலட்சம் மொத்த குடும்பங்களையும் பங்குபெறச் செய்வதற்கும் கமத்தொழில் அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக கமத்தொழில் அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதுடன், இந்த நிகழ்ச்சித்திட்டம் சார்பில் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.