• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது நடைமுறையிலுள்ள விமானப் போக்குவரத்து உடன்படிக்கையைத் திருத்துதல்
- இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் விமானப் போக்குவரத்து உடன்படிக்கையானது 2003‑08‑24 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு, இந்த உடன்படிக்கையைத் திருத்துவதற்கு 2016‑12‑06 ஆம் திகதியன்று பஹாமாஸ், நாசாயுவில் நடாத்தப்பட்ட சிவில் விமான சேவைகள் பற்றிய மாநாட்டில் இரு தரப்பும் உடன்பாடு கண்டுள்ளன. இதற்கிணங்க, நெறிமுறை பத்திரத்தில் கைச்சாத்திடுவதற்கு 2021‑01‑11 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. உரிய வரைவு நெறிமுறை பத்திரத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க, இலங்கைக்கும் இஸ்ரேலிக்கும் இடையில் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து உடன்படிக்கையை திருத்துவதற்கான நெறிமுறை பத்திரத்தில் கைச்சாத்திடுவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இந்த நெறிமுறை பத்திரத்தில் கைச்சாத்திடுவதற்கு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவருக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்குமாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.