• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
SriLankan Airlines கம்பனியின் வருமானம் ஈட்டலை மேம்படுத்துவதற்காக கணனி மென்பொருள் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான பெறுகையினை வழங்குதல்
- SriLankan Airlines கம்பனியின் வருமானம் ஈட்டலை மேம்படுத்துவதற்காக கணனி மென்பொருள் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காக சர்வதேச ரீதியில் போட்டி கேள்வி வழிமுறையினை பின்பற்றி கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, அதற்கிணங்க நான்கு கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ள.ன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஆகக்கூடிய அனுசரணையான விலை முன்வைப்பினை செய்துள்ள ஐக்கிய அமெரிக்க குடியரசின் PROS, Inc கம்பனிக்கு ஐந்து வருட காலப்பகுதி சார்பில் 3,243,600 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு உரிய பெறுகை ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.