• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும் / இடைமாறல் பகுதியில் சர்வதேச உணவு சிற்றுண்டிச்சாலை வலையமைப்பு உணவகம் அல்லது / அத்துடன் சர்வதேச வர்த்தக பெயருடனான ஆடை மற்றும் துணைப் பொருட்கள் கடையொன்றை நடாத்திச் செல்வதற்கு தேசிய ரீதியில் போட்டி கேள்வி கோருதல்
- கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும் / இடைமாறல் பகுதியில் சர்வதேச உணவு சிற்றுண்டிச்சாலை வலையமைப்பு உணவகம் அல்லது / அத்துடன் சர்வதேச வர்த்தக பெயருடனான ஆடை மற்றும் துணைப் பொருட்கள் கடையொன்றை நடாத்திச் செல்வதற்கு தேசிய ரீதியில் போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, இதன்பொருட்டு மூன்று விலைமனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஆகக்கூடிய அனுசரணையான விலை முன்வைப்பினை செய்துள்ள M/s. Flemingo Duty Free (Pvt) Ltd. நிறுவனத்திற்கு மூன்று வருட காலப்பகுதி சார்பில் 2,502,624 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மொத்த தொகைக்கு உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.