• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை
- உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டங்களை வரையும் பொருட்டு அடிப்படையாகக் கொள்வதற்காக ஆரம்ப வரைவொன்றினைத் தயாரிப்பதற்கு 2023‑01‑16 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த ஆலோசனைக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப வரைவினை அடிப்படையாகக் கொண்டு சட்டத்தினை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.