• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 ஆம் ஆண்டிற்காக அரசாங்க வைத்திய வழங்கல்கள் பிரிவிற்குத் தேவையான சத்திர சிகிச்சை துணியினை உள்நாட்டு வழங்குநர்களிட மிருந்து கொள்வனவு செய்தல்
– அரசாங்க வைத்தியசாலைகளில் கிளினிக் நோக்கங்களுக்காகவும் சத்திர சிகிச்சை களுக்காகவும் தேவைப்படும் சத்திரசிகிச்சை துணி அளவினை நிரந்தர தவணை முறையின் கீழ் உள்நாட்டு சிறிய அளவிலான உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு 2012‑12‑05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2023 ஆம் ஆண்டிற்குத் தேவையான 30 மில்லியன் மீற்றர் சத்திரசிகிச்சை துணியினை கொள்வனவு செய்வதற்கு அரசாங்க வைத்திய வழங்கல்கள் பிரிவில் பதிவு செய்து கொண்டுள்ள 405 சத்திர சிகிச்சைத் துணி வழங்குநர்களிலிருந்து 348 வழங்குநர்களை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. விலைக்குழுவானது சத்திர சிகிச்சை துணி மீற்றர் ஒன்றின் நிலையான விலை 74.96 ரூபாவாக அங்கீகரித்துள்ளது. இதற்கிணங்க, 2023 ஆம் ஆண்டிற்காக 30 மில்லியன் மீற்றர் சத்திர சிகிச்சைத் துணியினை கொள்வனவு செய்யும் பெறுகையினை தெரிவு செய்யப்பட்டுள்ள 348 வழங்குநர்களுக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.