• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்தின் கூட்டு தொழில்முயற்சி கம்பனியும் திருகோணமலை சாம்பூரில் சூரிய மின்சக்தி நிலையத்தை தாபித்தல்
– இதற்கு முன்னர் சாம்பூர் நிலக்கரி மின் நிலையம் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த இடத்திலேயே 135 மெகாவொட் சூரிய மின்சக்தி கருத்திட்டமொன்றை இரண்டு கட்டங்களில் கூட்டாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு இந்தியாவின் தேசிய அனல்மின் நிலையமும் இலங்கை மின்சார சபையும் உடன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த கருத்திட்டத்தின் 01 ஆம் கட்டத்தின் கீழ் 42.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மொத்த முதலீட்டின் மூலம் 50 மெகாவொட் சூரியசக்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் 23.6 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொ்ணட மதிப்பீட்டு செலவில் சாம்பூரிலிருந்து கப்பல்துறை வரை 40 கிலோமீற்றர் நீளம் கொண்ட 220 கிலோவொட் அனுப்பீட்டு வழியினை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த கட்டங்கள் 2024 தொடக்கம் 2025 வரை இரண்டு வருட காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. கருத்திட்டத்தின் 02 ஆம் கட்டத்தில் 72 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மொத்த முதலீட்டின் கீழ் 85 மெகாவொட் மேலதிக ஆற்றல் கொண்ட சூரிய மின்சக்கதி நிலையமொன்றை நிர்மாணிக்கப்படவுள்ளது. அதே போன்று குறித்த இந்த 2 ஆம் கட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கு 42 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மதிப்பீட்டு செலவில் கப்பற்றுறையிலிருந்து ஹபரனை வரை 220 கிலோவொட் ஆற்றல் கொண்ட 76 கிலோமீற்றர் நீளமான அனுப்பீட்டு வழியொன்றை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.