• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 அரச வெசாக் உற்சவத்தை நடாத்துதல்
– அதிவணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரோக்களினதும் அகில இலங்கை சாசனஆரக்‌ஷக்க சபையினதும் சிபாரிசின் பெயரில் 2023 அரச வெசாக் உற்சவம் (ஶ்ரீ புத்த வருடம் 2567) பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் பௌத்த அலுவல்கள் திணைக்களமும் இணைந்து புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், மாதம்பை கெபல்லாவெல ஶ்ரீ ரத்தனசிறி பிரிவெனா விகாரையில் நடாத்துவததற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2023‑05‑02 ஆம் திகதியிலிருந்து 2023‑05‑08 ஆம் திகதிவரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்துவதற்கும் இதற்கு ஒருங்கிணைவாக பல்வேறுபட்ட மத மற்றும் சமூக ரீதியிலான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.