• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச பூச்சிய கழிவு தினத்தினை நினைவுகூறும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2023‑03‑30
– ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 ஆம் திகதி சர்வதேச பூச்சிய கழிவு தினமாக பெயரிடும் பிரகடனமானது துருக்கி குடியரசின் தலைமையில் 2022‑12‑14 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலைபேறுடைய அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சிநிரலை முன்கொண்டு செல்வதற்கு பூச்சிய கழிவு முயற்சிகளை மேம்படுத்துவது இந்த தினம் பிரகடனப்படுத்துவதன் நோக்கமாகும். இதற்கிணங்க, சுற்றாடல் அமைச்சும் ஏனைய உரிய தொடர்புடைய நிறுவனங்களினதும் பங்களிப்புடன் 2023‑03‑30 ஆம் திகதியன்று சர்வதேச பூச்சிய கழிவு தினத்தினை நினைவுகூறும் முகமாக தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடாத்தும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.