• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை விவசாய நிறுவனத்தை கூட்டிணைத்தல்
- இலங்கையின் கமத்தொழில் அபிவிருத்தியின் பொருட்டு உணவு பயிர்கள், பெருந்தோட்ட பயிர்கள், ஏற்றுமதி கமத்தொழில் பயிர்கள், விலங்கு உற்பத்தி, பூ, அழகு செடிகள், சுற்றாடல், வனப்பாதுகாப்பு மற்றும் கமநல அபிவிருத்தி போன்ற பல்வேறுப்பட்ட துறைகளுக்குரியதாக ஒன்றிணைந்த அனுகுகையை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானதோடு, இதன் பொருட்டு பல்வேறுப்பட்ட நிறுவனங்களின் உரி்ய விடயங்கள் தொடர்பில் உயர் தேர்ச்சியுடன்கூடிய கமத்தொழில் தொழில்சார்பாளர்களை தொழிநுட்ப ரீதியில் ஒன்றிணைக்கும் கட்டமைப்பினை தாபிப்பது பொருத்தமானதென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க கமத்தொழில் தொழில் வல்லுநர்களின் சேவை தரங்களையும் ஒழுக்க நெறிகளையும் உறுதிப்படுத்தி அவர்களுடைய சேவையினை விரிவாக, வினைத்திறமையுடன் பயனுள்ள வகையில் பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் தற்போது 1,000 கமத்தொழில் தொழில் சார்பாளர்களுக்கு மேற்பட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள இலங்கை விவசாய நிறுவனத்தை கூட்டிணைப்பதற்கும் இதன் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.