• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானசேவைகள் சட்டத்தின் 6(3)(உ) ஆம் பிரிவை திருத்துதல்
- விமானசேவைகள் துறைகளை அரசாங்க தனியார் பங்குடமைக்காக திறத்தல் மற்றும் தனியார் நிறுவனங்களால் இந்த துறைகளில் முதலீடு செய்தல் போன்றன உரிய துறைகளின் துரித வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த விமான சேவைகள் தொழிற்றுறையின் விருத்திக்கும் ஏதுவாய் அமையுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் வித்தில் விமானசேவைகளை வழங்கும் பொருட்டு சேவை வழங்குநர்களாக ஆள் ஒருவரை அல்லது அதற்கு கூடுதலாக நியமிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானசேவைகள் சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.