• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாக்கு பதனிடல் கைத்தொழில் தொடர்பிலான நடவடிக்கைமுறை
- உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கருங்கா பாக்குகளை ஏற்றுமதி செய்தல் மற்றும் கருங்கா பாக்குகளை இறக்குமதி செய்து பெறுமதி சேர்க்கப்பட்டு மீள் ஏற்றுமதி செய்வது சம்பந்தமான பிரேரிப்புகள் 2023‑03‑13 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதோடு, இது தொடர்பிலான விடயங்ளை ஆராய்ந்து அமைச்சரவைக்குப் சிபாரிசுகளுடனான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு சனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகரின் தலைமையில் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கருங்கா பாக்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை முறைகள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்டு மீள் ஏற்றுமதிக்காக கருங்கா பாக்குகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை முறைகள் என்பவற்றுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.