• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீகிரியாவை நிலைபேறான சுற்றுலா பயண முடிவிடமொன்றாக அபிவிருத்தி செய்தல்
- உலக மரபுரிமையாகவும், அதேபோன்று இலங்கையின் முக்கிய தொல்பொருளியல் இடமொன்றாகவுமுள்ள சீகிரியா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிக கவனத்தை ஈர்க்கும் சுற்றுலா பயண முடிவிடமொன்றாவதோடு, இது நாட்டிலுள்ள சுற்றுலா இடங்களில் அதிகளவான வருமானத்தை ஈட்டுகின்ற இடமுமாகும். ஆயினும் சுற்றுலா முடிவிடமொன்றாக இதனை முகாமிக்கும் போது எழுகின்ற பிரச்சினைகளைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உரிய சகல தரப்பினர்களினதும் பங்களிப்புடன் சீகிரியாவை நிலைபேறான சுற்றுலா பயண முடிவிடமொன்றாக அபிவிருத்தி செய்வதற்காக பிரதான திட்டமொன்றை தயாரிக்கும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினாலும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.