• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரியை மேலும் விரிவாக்குவதற்காக உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக மாற்றுதல்
- 1976 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவன சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தாபிக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனத்திற்குரிய துணை கம்பனியொன்றாக வரையறுக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரியானது தாபிக்கப்பட்டுள்ளது. நவீன முறையிலான பல்கலைக்கழகமாக ஹோமாகம பிரதேசத்தில் தாபிக்கப்பட்டுள்ள இந்த கல்லூரி தற்போது பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின் படிப்பு பட்டங்களை வழங்கும் நிறுவனமொன்றாக நடாத்திச் செல்லப்படுகின்றது. தற்போது இந்த கல்லூரியில் 11,500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் 05 பீடங்களில் 50 இற்கு மேற்பட்ட பட்டபாடநெறிகளில் கற்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய தரப்படுத்தலுக்கமைவாக முன்னணி வகிக்கின்ற கல்வி நிறுவன கட்டமைப்புக்களுக்குச் சமமான கட்டமைப்புக்களைப் பின்பற்றுவதன் மூலம் NSBM நிறுவனத்தின் பணிகளை மிக பயனுள்ள வகையிலும் அதேபோன்று சர்வதேச தரங்களுக்கும் அமைவாக நடாத்திச் செல்வதற்கு இயலுமென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, தேவையான கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை செய்வதற்கு இயலுமாகும் வகையில் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 32 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளுக்கமைவாக NSBM நிறுவனத்தின் பதிவினை உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.