• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் கீழ் அரசாங்க சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் பாடநெறிகளை கற்பதற்கான வசதிகளை ஏற்பாடு செய்தல்
- அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் பொருட்டு வெட்டுப்புள்ளிகள் போதியளவு இல்லாத மாணவர்களுக்கு அரசாங்க சார்பற்ற பட்டங்களை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பட்டப்பாடநெறிகளை கற்பதற்காக வட்டியில்லா கடன் வசதிகளை வழங்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2017‑04‑04 ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. தற்போது ஐந்து (05) மாணவர் குழுக்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற்றுள்ளதோடு, ஆறாவது (06) குழு சார்பில் தகைமை பெறும் மாணவர்கள் தற்போது இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கிணங்க இதுவரை பின்பற்றிய வழிமுறையின் பிரகாரம் வட்டியற்ற இந்த மாணவர் கடன் திட்டத்தைத் தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கும் அதன் கீழ் ஏழாவது (07) குழுவாக 5,000 மாணவர்களுக்கு வசதிகளை செய்தவற்குமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.