• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொரியாவின் Saemaul Undong கருத்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்து கொள்ளல்
- உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம், நலன்புரி மற்றும் கல்வி போன்றவற்றை மேம்படுத்தி கொரியாவின் கிராமிய பிரதேசங்களில் நிலவிய மரபுரீதியான கமநலப் பொருளாதாரத்தை கைத்தொழில்மயமான ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றுவதற்கு 1970 ஆம் ஆண்டிலிருந்து கொரிய குடியரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த Saemaul Undong கருத்திட்டம் ஏதுவாக அமைந்துள்ளது. இந்த Saemaul Undong கருத்திட்ட எண்ணக்கருவை வேறு நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் கொரிய குடியரசினால் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள Saemaul Undong மன்றத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்து கொண்டதன் மூலம் சப்ரகமுவ மாகாண சபையினால் இலங்கையில் Saemaul Undong கருத்திட்டத்தை 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த காலப்பகுதி தற்போது முடிவடைந்துள்ளது. Saemaul Undong எண்ணக்கருவின் கீழ் இலங்கையில் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் விதத்தில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கும் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கும் Saemaul மன்றத்திற்கும் இடையில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பொருட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.