• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1977 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைக்கும் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- பொதுநலவாய நாடுகளுக்கும் நாடுகளில் இருந்தும் வெளிநாட்டு அரசுகளுக்கும் மற்றும் அரசுகளிலிருந்தும் தப்பிச்சென்ற நபர்களை குறித்த நாட்டுக்கு மீள ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் பொதுநலவாய நாடுகளிலிருந்து அல்லது வௌிநாடுகளிலிருந்தும் வெளிநாட்டு அரசுகளுக்கும் மற்றும் அரசுகளிலிருந்தும் மீள் ஒப்படைக்கப்பட்ட இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகள் பற்றிய செயற்பாடுகளை முறைமைப்படுத்துவதற்கும், அவற்றுடன் தொடர்புடைய அல்லது இடைநேர் விளைவான விடயங்கள் சார்பில் ஏற்பாடுகளை செய்வதற்கும் 1977 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைக்கும் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் இரண்டாவது பிரிவிலுள்ள ஏற்பாடுகளுக்கு உரியதாகும் பொதுநலவாய நாடுகள் தொடர்பில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் கட்டளையின் மூலம் வௌிப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு இயலும். இதற்கிணங்க, 56 நாடுகள் உள்ளடக்கப்படும் விதத்தில் 1977 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைக்கும் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் திருத்தப்பட்ட கட்டளையானது 2023‑02‑14 ஆம் திகதியிடப்பட்டதும் 2319/30 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.