• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச அணுசக்தி முகவராண்மையின் சிறப்புரிமைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகள் பற்றிய ஒப்பந்தத்திற்கான அணுகல்
- இலங்கை 1957ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச அணுசக்தி முகவராண்மையின் ஆரம்ப உறுப்பு நாடாக செயலாற்றி வருவதோடு, இந்த முகவராண்மையின் தொழிநுட்ப ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மருத்துவம், கைத்தொழில், பாதுகாப்பு, உணவு, கமத்தொழில், சுற்றாடல் மற்றும் வலுசக்தி திட்டமிடல் போன்ற துறைகளுக்காக தொழிநுட்ப ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்கின்றது. இந்த தொழிநுட்ப ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக இந் நாட்டிற்கு வருகை தரும் இந்த முகவராண்மையின் நிபுணர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டு உரிமைகளை வழங்குவதற்கான உடன்பாடுகளில் இலங்கை இதுவரை கைச்சாத்திடவில்லை. இதற்கிணங்க, சட்டமா அதிபர் திணைக்களம், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, இலங்கை அணுசக்தி சபை மற்றும் இலங்கை அணுசக்தி ஒழுங்குறுத்துகை சபை என்பன உடன்பட்டுள்ளவாறு சர்வதேச அணுசக்தி முகவராண்மையின் சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டு உரிமைகள் பற்றிய ஒப்பந்தத்தை அனுகுவதற்கும் அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க இராஜதந்திர சிறப்புரிமைகள் தொடர்பான சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்களின் பிரகாரம் குறித்த உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினாலும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.