• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1980 ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஒழுங்குவிதிகளை பிறப்பித்தல்
- 1980 ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டதும் 1981‑01‑23 ஆம் திகதியிடப்பட்டதும் 125 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய ஒழுங்குவிதிகளை திருத்தி ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் 2022‑12‑22 ஆம் திகதியிடப்பட்டதும் 2311/39 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.