• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சந்திரிகாவெவ மற்றும் கிரிஇப்பன்வெவ ஆகிய நீர்த்தேக்களின் மேற்பரப்பில் மிதக்கும் சூரியசக்தி பலக முறைமை சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களைத் தாபிக்கும் முன்னோடிக் கருத்திட்டம்
- கொரிய குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையில் 2009 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட கொடை உதவி தொடர்பிலான கட்டமைப்பு சமவாயத்தின் கீழ் கொரிய குடியரசின் வர்த்தக, கைத்தொழில் மற்றும் வலுசக்தி அமைச்சினால் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சந்திரிகாவெவ மற்றும் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிரிஇப்பன்வெவ ஆகிய நீர்த்தேக்களின் மேற்பரப்பில் சுமார் 1 மெகாவொட் சக்தி உற்பத்தி கொள்திறனுடைய மிதக்கும் சூரியசக்தி பலக முறைமை சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களைத் தாபிக்கும் முன்னோடிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 6.83 பில்லியன் கொரியா வொன்களை வழங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரிய குடியரசு சார்பில் இந்த முன்னோடிக் கருத்திட்டத்தை கண்காணிக்கும் நிறுவனமாக  Korea Institute for Advancement of Technology நிறுவனம் செயலாற்றும். அதற்கிணங்க, செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாடுகளுக்கமைய, இந்த முன்னோடிக் கருத்திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்காக கொரிய குடியரசின் Korea Institute for Advancement of Technology நிறுவனம், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் என்பவற்றிற்கு இடையே கலந்துரையாடல் குறிப்பில் கைச்சாத்திடும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.