• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரிதியகம புனர்வாழ்வளிப்பு நிலையத்தின் முகாமைத்துவத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் உடைமையாக்கிக் கொள்ளல்
- 1975 ஆம் ஆண்டில் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ரிதியகம புனர்வாழ்வளிப்பு நிலையம் 1990 ஆம் ஆண்டில் தென்மாகாண சபையின் சமூக அலுவல்கள் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 450 பேரை தங்கவைத்துக்கொள்ளக்கூடிய விதத்தில் இந்த நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது இங்கு 576 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் சிரமங்களின் மத்தியிலும் அழுத்தத்துடனான வாழ்க்கை நிலைக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இந்த நிலைமை மற்றும் நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்படும் கட்டளையின் மீது நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களில் உள்ளவர்களை இந்த நிலையத்தில் தங்கவைத்திருத்தல் போன்றவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த நிலையத்தை தென்மாகாண சபையின் மூலம் நிர்வகிப்பதற்குப் பதிலாக தேசிய மட்டத்திலான நிலையமொன்றாக மத்திய அரசாங்கத்தின் கீழ் நிர்வகிப்பது மிகவும் பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ரிதியகம புனர்வாழ்வளிப்பு நிலையத்தை சமூக சேவைகள் திணைக்களத்திற்கு உடைமையாக்கும் பொருட்டு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.