• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் 2009 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவக சட்டத்தை திருத்துதல்
- தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்பன பொருட்டிலான நியமங்களை தயாரிப்பதற்கு தேசிய கொள்கையினை வௌியிடும் நோக்கம் கருதி தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகமொன்றை தாபிப்பதற்கும் சேவை கொள்வோர் மற்றும் சேவை புரிவோர் ஆகிய இரு தரப்பினரினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் தொழில்சார் பாதுகாப்பு சூழலொன்றை உருவாக்கும் நோக்கில் 2009 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவன சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை சமகால தேவைகளுக்கு ஏற்ப திருத்த வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவக சட்டத்தை திருத்துவதற்கு சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.