• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொதுநலவாய கல்விக்கான இலங்கை பங்களிப்புத் தொகையைச் செலுத்துதல்
- "பொது நலவாய கல்வி" என்னும் போது பொது நலவாய நாடுகளின் தலைவர்களினால் உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்குத் தேவையான மனிதவள அபிவிருத்திக்கு அவர்களுடைய ஆற்றலை பலப்படுத்துவதன் சார்பில் தாபிக்கப்பட்ட சர்வதேச அமைப்பொன்றாகும். பொது நலவாய நாடுகள் அமைப்பின் கல்வித் துறையான "பொது நலவாய கல்வி" சார்பில் உறுப்பு நாடொன்றாக இலங்கையின் பங்களிப்பினை வழங்குவது வெளிநாட்டலுவல்கள் அமைச்சு பொது நலவாய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் கல்வித் துறைக்காகும். அதற்கிணங்க, உரிய பங்களிப்புத் தொகையினைச் செலுத்தி "பொது நலவாய கல்வி" அமைப்பில் உறுப்புரிமையை தொடர்ந்தும் பேணும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.