• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டப்படுகை தொடர்பிலான இலங்கையின் எல்லைகளை இனங்காணுதல்
- சமுத்திர சட்டம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் இலங்கையின் 200 கடல் மைல்கள் கொண்ட விசேட பொருளாதார வலயத்திற்கு அப்பால் அமைந்துள்ள கண்டப்படுகையின் வௌி எல்லைகளை தாபிப்பதற்கு இலங்கை 2009 ஆண்டில் அதன் தொழிநுட்ப மற்றும் விஞ்ஞான தரவுகளையும் ஏனைய தகவல்களையும் ஐக்கிய நாடுகளின் கண்டப்படுகை எல்லைகள் தொடர்பான ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது. இதற்கிணங்க, இந்த ஆணைக்குழுவினால் இலங்கையின் உரிமையினை பரிசீலனைச் செய்வதற்கு துணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை உரிமை கோரும் கண்டப்படுகை எல்லைகளை இனங்காண்பதற்கு குறித்த துணைக் குழுவுடன் செயலாற்றும் பொருட்டு அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் தேசிய சமுத்திர நடவடிக்கைகள் தொடர்பிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கண்டப்படுகையினை தாபிப்பதற்கு துணை சாட்சிகளுடன் அதன் பிரதி எல்லைகளை இனங்காணும் நோக்குடன் குறித்த தேசிய சமுத்திர நடவடிக்கைகள் குழுவை மீளமைப்பதற்கான ஆர்வ வௌிப்படுத்தலை கோரும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.