• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை என்பவற்றை சமூக பாதுகாப்பு உதவு தொகை அறிவீட்டிலிருந்து விலக்களித்தல்
- நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலையினை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நாட்டரிசி நெல் கிலோகிராம் ஒன்று 100/- ரூபா வீதம் கொள்வனவு செய்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நெல் கிலோ ஒன்றுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகைக்கு மேலதிகமாக அரிசி உற்பத்தி செயற்பாட்டில் அரிசி கிலோ கிராம் ஒன்றை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு வழங்கும் வரை நீர், மின்சாரம் களஞ்சியம், போக்குவரத்து போன்றவை சார்பில் மேலதிக செலவுகளை ஏற்கவேண்டி நேரிடும் எனவும் இதற்கு மேலதிகமாக சமூகப் பாதுகாப்பு உதவு தொகையாக அரிசி கிலோ ஒன்று சார்பில் சுமார் ரூபா 6.00 / 7.00 செலவு செய்ய நேரிடுமெனவும் அரிசி உற்பத்தியாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த செலவினைக் குறைத்துக் கொள்வதற்காக அத்தகைய ஏதேனும் சலுகையை வழங்க முடியுமாயின் விவசாயிகளுக்கு அதிக விலை வழங்கும் சாத்தியம் உள்ளதென அவர்களினால் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தற்போது சந்தையில் நிலவும் அரிசியின் உச்ச விலையை அவ்வாறே பேணி நாட்டரிசி நெல் கிலோ ஒன்று சார்பில் நூறு ரூபாவினை விட அதிக விலையினை விவசாயிகளுக்கு வழங்கு வதற்கு இயலுமாகும் வகையிலும் நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை என்பவற்றை சமூக பாதுகாப்பு உதவு தொகை அறிவீட்டிலிருந்து விலக்களிக்கும் பொருட்டு 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை சட்டத்தைத் திருத்துவதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.