• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- ரூபா வீழ்ச்சியடைதலின் தாக்கம் உலகளாவிய சந்தை பெறுமதி / செலவு, காப்புறுதி மற்றும் கப்பல் கட்டண பெறுமதி ஆகிய விடயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு, உத்தேச வகுப்பீட்டு குறியீடு (HS Code)  677 இன் கீழ் தெரிவு செய்யப்பட்ட பொருட்களின் மீது திட்டவட்டமான அலகுகளின் மீது செஸ் வரி திருத்தப்பட்டுள்ளதோடு இதன் பொருட்டு 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் 2022‑11‑14 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த இந்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் விதிக்கப்படும் அத்தகைய ஒழுங்குவிதியொன்று வெளிப்படுத்தப்பட்ட திகதி தொடக்கம் 04 மாத காலத்திற்குள் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் அதற்கிணங்க, 2022‑11‑14 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.