• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் Jet A - 1 விமான எரிபொருள் வழங்குவதற்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்
- விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் Jet A - 1 விமான எரிபொருள் தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படுகின்றது. தற்போது நாடு முகங்கொடுத்துள்ள அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக Jet A - 1 விமான எரிபொருள் உற்பத்தி செய்யப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் முடங்கியுள்ளமை Jet A - 1 விமான எரிபொருளை இறக்குமதி செய்தலின் பொருட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சவால்மிக்க பணியாக உருவாகியுள்ளதன் விளைவாக பொருள் மற்றும் பயணிகள் விமான சேவைகளுக்குத் தேவையான Jet A - 1 விமான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த முடியாததால் இலங்கை விமான நிலையங்களுக்கு வருகைதரும் விமானங்களுக்குத் தேவையான Jet A - 1 விமான எரிபொருள் விநியோகத்திற்கான மாற்று வழிகளின்பால் கவனம் செலுத்த நேரிட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் Jet A - 1 விமான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்கு ஏனைய நாடுகளின் விமான சேவைகளுக்கு Jet A - 1 விமான எரிபொருள் வழங்கும் தரப்புகளுக்கு உச்ச விநியோக எல்லைகளின் கீழ் இந் நாட்டிற்கு Jet A - 1 விமான எரிபொருள் வழங்கும் வாய்ப்பினை வழங்குவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, Jet A - 1 விமான எரிபொருள் வழங்குவதற்கு ஆற்றலுள்ள பிற தரப்பினர்களுக்கு சந்தை வாய்ப்புக்களை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.