• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அணுசக்தி பொறுப்பு பற்றிய இரண்டு (02) பிரதான சர்வதேச சமவாயங்களுக்கு இலங்கை ஒரு தரப்பாக இருத்தல்
- இலங்கையின் எதிர்கால வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அணு வலுச்சக்தியை மாற்று வழிமுறையொன்றாக பரிசீலனை செய்வதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த தீர்மானத்திற்கு அமைவாக அணுசக்தியைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி சம்பந்தமான விடயங்களை ஆராயும் பொருட்டு நெறிப்படுத்தல்  குழுவொன்றும் 09 செயற்பாட்டுக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்பாட்டுக் குழுக்களினால் தயாரிக்கப்பட்ட சுயமதிப்பீட்டு அறிக்கை சம்பந்தமாக சர்வதேச அணு சக்தி முகவராண்மை வழங்கியுள்ள சிபாரிசுக்கமைவாக அணுச்சக்தியின் மூலம் மின்னுற்பத்தியை தொடர்வதற்கு இலங்கைக்கு ஆற்றல் உள்ளது. அதற்கிணங்க, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை அணுசக்தி தாக்கத்திற்கான சிவில் பொறுப்பு பற்றிய வியானா சமவாயத்தினதும் அணுசக்தி தாக்கத்திற்கான குறைநிரப்பு நட்டஈடு சமவாயத்தினதும் ஒரு தரப்பாக இருத்தல் பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த சமவாயங்களில் தரப்பொன்றாவதற்கு தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினாலும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.