• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அவுஸ்திரேலியாவின் ‘Sight for All’ சமூக கருத்திட்ட நிறுவனத்திற்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- அவுஸ்திரேலியாவின் ‘Sight for All’ சமூக கருத்திட்ட நிறுவனத்தினால் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளிலுள்ள கண் பிரிவுகளுக்கு மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சைக்குரிய உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதற்கும் சுகாதார பதவியணியினரின் திறனை அபிவிருத்தி செய்வதற்கும் கொடையொன்றை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதன் கீழ் பதுளை மாகாண பொது வைத்தியசாலை, இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் கலுபோவில ஆகிய போதனா வைத்தியசாலைகள் மற்றும் தங்கள்ள ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் கண் சத்திரசிகிச்சைகளுக்குத் தேவையானன நவீன வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் பிராந்திய கண் பிரிவுகளிலுள்ள கண் மருத்துவ பதவியணியினரின் திறனை அபிவிருத்தி செய்வதற்கும் உபகரணங்களை தரமுயர்த்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கருத்திடத்தின் கீழ் 99.42 மில்லியன் ரூபாவை கொண்ட கொடையொன்று கிடைக்கவுள்ளது. இதற்கிணங்க, உத்தேச கொடையினைப் பெற்றுக் கொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் ‘Sight for All’ சமூக கருத்திட்ட நிறுவனத்திற்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.