• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு பற்றிய தேசிய செயல் திட்டம்
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினால் 2000 ஆம் ஆண்டில் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்னும் பெயரில் பிரேரணையொன்றை வௌிப்படுத்தியுள்ளதோடு, உலகின் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடையாத பல நாடுகள் இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய செயற்பாட்டுத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கிணங்க, சகல தரப்பினர்களினதும் பங்களிப்புடனும், உடன்பாடுகளுடனும் வரையப்பட்டுள்ள "பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு பற்றிய தேசிய செயல் திட்டம் - 2023-2027” இனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.