• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி நகர அபிவிருத்தியின் பொருட்டு அபிவிருத்தி திட்டமொன்றைத் தயாரித்தல்
- கண்டி நகரத்தில் நிலவும் நெரிசலைக் குறைத்து முறையான திட்டமொன்றின் கீழ் இந்த நகரத்தை அபிவிருத்தி செய்யும் தேவை மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அதற்கிணங்க, கண்டியிலிருந்து குண்டசாலை வரையான கண்டி நகரத்தை அபிவிருத்தி செய்வதற்குப் பொருத்தமான திட்டம் மற்றும் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் உரிய நிறுவனங்களின் உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.