• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் சேவை வழங்கும்போது அறவிடப்படும் கட்டணங்களைத் திருத்துவதற்காக செய்யப்பட்டுள்ள ஒழுங்குவிதி
- ஆட்பதிவுத் திணைக்களத்தினால் சேவை வழங்கும்போது அறவிடப்படும் கட்டணங்களைத் திருத்தும் பொருட்டு இதற்கு முன்னர் நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டமொன்றில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு 2017 ஆம் ஆண்டின் ஆட்களைப் பதிவு செய்தல் ஒழுங்குவிதிகள் இலக்கம் 1 இனைத் திருத்தி தயாரிக்கப்பட்டுள்ள வரைவு ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அதன் பின்னர், குறித்த ஒழுங்கு விதிகளை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்குமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.