• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டம் மற்றும் 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் முகவர் உரிமப்பத்திரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்
- துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் கீழ் செயற்படும் வணிக கப்பல் செயலகத்தினால் 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் 13 வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் முகவர் உரிமப்பத்திரம் வழங்கும் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் என்பவற்றை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.