• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேலதிக கட்டணம் வௌிப்படுத்தப்பட்ட கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அங்கீகாரம் - (சுங்க கட்டளைச் சட்டம்)
- சுங்க கட்டளைச் சட்டத்தின் 10(அ) பிரிவின் கீழான ஏற்பாடுகளின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் சிலவற்றுக்கு சுங்க இறக்குமதித் தீர்வையின் மீது நூற்றுவீதமொன்றாக மேலதிகக் கட்டணத்தை விதித்து வெளியிடப்பட்டுள்ள இரண்டு ஒழுங்குவிதிகள் 2022‑11‑30 ஆம் 2023‑01‑04 ஆம் திகதிகளில் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.