• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் பாடநெறிகளை கற்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்திற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திலுள்ள நிபந்தனைகளைத் திருத்துதல்
– இந்த விடயம் தொடர்பில் 2022‑08‑22 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக அரசாங்க சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் பாடநெறிகளை கற்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்வது சம்பந்தமாக இலங்கை வங்கி, பொதுத் திறைசேரி மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கலந்துரையாடலின் போது உரிய தரப்பினர்கள் உடன்பட்டுள்ளவாறு உரிய பாடநெறிகளை பூர்த்தி செய்ததன் பின்னர், பாடநெறி கட்டணத்தை எட்டு (08) வருட காலத்திற்குள் தவணையாக செலுத்துவதற்கு பாடநெறியினை பூர்த்தி செய்ததன் பினனர், அடுத்துவரும் ஆண்டில் நிலவும் சராசரி முன்னுரிமை கடன் வழங்கல் வீதத்திற்கு 1 சதவீதம் சேர்க்கப்பட்ட  (AWPLR + 1%) மாதாந்த வட்டி வீதத்தின் கீழ் உரிய வட்டியினைச் செலுத்துவதற்கு இயலுமாகும் வகையில் உரிய தரப்பினர்களுடன் தற்போது செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையினைத் திருத்துவதற்கு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.