• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022 நான்காம் காலாண்டு முடிவில் பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் முன்னேற்றம்
– 2022 நான்காம் காலாண்டு முடிவில் 261 பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களுக்குரிய முன்னேற்றம் தொடர்பில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சில கருத்திட்டங்களுக்குரிய வெளிநாட்டு நிதிகள் நிறுத்தப்பட்டமை நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையின் மத்தியில் தேவையான நிதியை பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமம் என்பன காரணமாக பெரும்பாலான கருத்திட்டங்களின் முன்னேற்றம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது. சகல செயற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்ட தொடர்ந்து நடாத்திச் செல்வதற்கான வசதிகள், நியதிச்சட்டமுறை அதிகாரங்கள் மற்றும் தொழிநுட்ப சேவைகள் போன்றன குறித்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய அமைச்சின் குறிக்கோள் மற்றும் விடயநோக்கெல்லைகளுடன் அல்லது ஏற்புடைய ஏனைய நிறுவனங்களின் பணிகளில் உள்ளடக்கப்படாமையால், அத்தகைய கருத்திட்டங்களின் நிலைபேற்றான தன்மை சம்பந்தமான ஆபத்து நிலவுகின்றதெனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் அவற்றின் பெறுபேறுகளை முன்னோக்கிக் கொண்டு செல்தல், உரிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வரிசை அமைச்சுக்களுக்குப் பொறுப்புக்களை ஒப்படைக்கும் வகையில் அபிவிருத்தி முதலீடுகளின் முக்கிய செயலாற்றுகை குறிகாட்டிகளை உள்ளடக்கி, ஒவ்வொரு வரிசை அமைச்சுக்கும் நிறுவன ரீதியான பெறுபேறுகள் கட்டமைப்பு மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான முதலீட்டுப் பெறுபேறுகள் அடிப்படையிலான கட்டமைப்பு என்பன ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ள தேசிய தொழிற்பாட்டு மையத்தால் தயாரித்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.