• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய மதுவரி சட்ட மூலத்தை அறிமுகப்படுத்துதல்
- மதுசாரம் மற்றும் புகையிலைப் பாவனை, அதனுடன் தொடர்புடைய வர்த்தகங்களை ஒழுங்குறுத்துதல், உரிமப்பத்திரங்கள் வழங்குதல் மற்றும் வரி விதித்தல் சார்பில் 1912 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மதுவரிக் கட்டளைச் சட்டத்தை சமகாலத் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் திருத்துவது பொருத்தமானதென கண்டறியப்பட்டுள்ளதுடன், மதுவரிக் கட்டளைச் சட்டம் மற்றும் புகையிலை வரிச் சட்டம் என்பவற்றிற்குப் பதிலாக புதிய மதுவரிச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான பிரேரிப்பொன்று நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் 2022 இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கிணங்க, குறித்த நோக்கம் கருதி சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.