• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒருதடவை பயன்படுத்தப்பட்டு அகற்றப்படுகின்ற (Single-Use) பிளாஸ்ரிக் / பொலிதீன் கழிவுகளை கட்டுப்படுத்துதல்
- ஒருதடவை பயன்படுத்தப்பட்டு அகற்றப்படுகின்ற ஏழு (07) பிளாஸ்ரிக் / பொலிதீன் உற்பத்திகளை இறக்குமதி செய்தல், நாட்டில் உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் நாட்டில் பயன்படுத்துதல் சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட பிரேரிப்புகள் 2021‑08‑30 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கிணங்க குறித்த பிரேரிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து சிபாரிசுகளுடனான அறிக்கையினை சமர்ப்பிக்கும் பொருட்டு நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. குறித்த நிபுணர் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பின்வரும் பிளாஸ்ரிக் இறக்குமதி, உற்பத்தி, விற்பனை, உள்ளுர் பாவனை என்பன 2023‑06‑01 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக தடைசெய்வதற்கு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

• ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்துகின்ற பானம் அருந்தும் பிளாஸ்ரிக் ஸ்ட்ரோ மற்றும் கலக்கும் உபகரணங்கள்

• பிளாஸ்ரிக் மூலம் தயாரிக்கப்படும் யோகட் கரண்டி உள்ளிட்ட ஒரு தடவை பயன்படுத்தி அகற்றப்படும் பீங்கான், கோப்பை (யோகட் கப் தவிர), கரண்டிகள், முள்ளுக்கரண்டிகள் மற்றும் கத்திகள் 

• பிளாஸ்ரிக் மாலைகள்

• பிளாஸ்ரிக் மூலம் தயாரிக்கப்பட்ட இடியப்ப தட்டுகள்