• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு நகர அதிகார பிரதேசத்தில் வளித்தர முகாமைத்துவம் தொடர்பான சான்று அடிப்படையில் திறமுறை மற்றும் கொள்கைகளை மேம்படுத்தும் ஆற்றல் அபிவிருத்தி கருத்திட்டம்
- கொழும்பு நகர அதிகார பிரதேசத்தில் வளித்தர முகாமைத்துவம் தொடர்பான சான்று அடிப்படையில் திறமுறை மற்றும் கொள்கைகளை மேம்படுத்தும் ஆற்றல் அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொடையொன்றை வழங்குவதற்கு பிரான்ஸ் அபிவிருத்தி முகவராண்மை உடன்பாட்டினைத் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க கருத்திட்டத்தின் தொழிநுட்ப பங்காளராக இலாபம் ஈட்டாத நிறுவனமொன்றான 'எயார்பரிப்' நிறுவனத்தின் மூலம் கருத்திட்டத்திற்கான மொத்த செலவாக 300,000 யூரோக்கள் பெற்றுத்தரப்படும். உத்தேச கருத்திட்டத்தின் ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பிரான்ஸ் அபிவிருத்தி முகவராண்மை, 'எயார்பரிப்' நிறுவனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு என்பவற்றுக்கிடையில் முத்தரப்பு கூட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கும், கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் கண்காணித்தல் என்பன சுற்றாடல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் நெறிப்படுத்தல் குழுவொன்றை நியமிப்பதற்குமாக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.